இவர்கள்தான் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளனர்-எய்ம்ஸ்..!

எய்ம்ஸ் ஆய்வில் 50 வயதிற்கும் குறைவானவர்கள் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் அளித்த அறிக்கையில், கொரோனாவால் அதிக உயிரிழந்தோர் எந்த வயதினர் என்பதை குறித்த ஆய்வு கடந்த 2020 ஏப்ரல் 4 முதல் ஜூலை 24 வரையிலான காலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் 65 வயதினரை விட 50 வயதினருக்கும் குறைவானவர்களே அதிகமாக இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, மருத்துவமனையில் 654 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 247 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் 18 முதல் 50, 51 முதல் 65, 65 ற்கு மேல் என்ற மூன்று பிரிவுகளாக பிரித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளனர். இதில் அதிகமாக உயிரிழந்தவர்கள் 18 முதல் 50 வயதுடைய பிரிவினர். 42.1% பேர் இந்த பிரிவில் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 51 முதல் 65 வயதுடையவர்கள் 34.8 சதவீதம் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 23.1% இறந்துள்ளனர். இதே காலத்தில் 46 சிறார்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025