கேரளாவில் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபர்!!!

This news gives information about The young girl who poured petrol on the teenager refused to marry in Kerala-keralavil thirumanam seithi kolla maruthathal

தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்திஇருக்கிறார்.

அதற்கு கவிதா மறுக்கவும் , அஜின் ரேஜி மேத்யூ கொண்டு வந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா பகுதியை சேர்ந்த கவிதாவை அஜின் ரேஜி மேத்யூ என்பவர்  காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதாவை வலியுறுத்தியுள்ளார். இதனை கவிதா மறுத்து வந்தார்.

நேற்று கல்லூரிக்கு சென்ற கவிதாவிடம் அஜின் ரேஜி மேத்யூ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தியிருக்கிறார்.

அதற்கு கவிதா மறுக்கவும் , அஜின் ரேஜி மேத்யூ கொண்டு வந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

சம்பவம் நடந்த  இடத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து கவிதாவை  மீட்டு திருவல்லா அரசு மருத்தவ மனையில் அனுமதித்தனர்.தப்பி ஓட முயன்ற அஜின் ரேஜி மேத்யூ-வை போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேத்யூவிடம் விசாரிக்கையில், காதலித்ததாக கூறியுள்ளார் என தகவல் தெரிவிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் 60 சதவித தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.