வைரல் வீடியோ :எருமையை மாடு என்று தவறாக எண்ணிய நபர், தங்க சங்கிலியை பரிசாக அளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா? மனிதனுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் அழகான விஷயம் பலர் செல்லப்பிராணியை தங்கள் குழந்தைகளை போல வளர்த்து வருவதை பார்க்கிறோம்.
அந்த வகையில், ஒருவர் தனது வளர்ப்பு பிராணியான எருமைக்கு 10 கிலோ எடையிலான தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியான நிலையில், 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
வட மாநிலத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர் முஹம்மது டேனிஷ் யாகூப் என்பவர் தான் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ஒரு எருமை தரையில் அமர்ந்திருப்பதையும், அதைச் சுற்றி இரண்டு மனிதர்கள் இருப்பதையும் காட்டுகிறது, அவர்களில் ஒருவர் சிவப்பு நிற பெட்டியில் இருந்து 10 கிலோ தங்கச் சங்கிலியை எடுத்து எருமையின் கழுத்தில் போட்டுள்ளார்.
unknown node