பெற்ற தாயை தீ வைத்து எரித்த கொடூர மகன் ..! வைரலாகும் சிசிடிவி காட்சி!

உத்தரப் பிரதேசம் : அலிகார் மாநிலத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது தாயை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் தனது தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அந்த இளைஞர் கூறிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அந்த இளைஞர் தனது தாயை தீ வைத்து எரிக்கும் போது சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை கைர் காவல் நிலைய வளாகத்திற்குள் நடந்தது. உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக அந்த பெண்ணும் அவரது மகனும் காவல் நிலையம் வந்தனர். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண்ணும் அவரது மகனும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறி வளாகத்தில் உள்ள இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.
பின் அங்கு ஒரு போலீசார் நின்று கொண்டு இருந்த நிலையில், அந்த பெண் தன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தன்னைத் தானே தீ வைத்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார். பிறகு கையில் வைத்து இருந்த தீ போட்டியை பிடிங்கினார். ஆனால், இரக்கம் இல்லாத மகன் தாயை தீக்குளிக்க விடாமல் காவல் துறை அதிகாரி தடுத்துள்ளதைக் கண்ட டு தனது தாயாரை லைட்டரைப் பயன்படுத்தி தீ வைத்து விட்டார்.
பிறகு தனது தொலைபேசியை எடுத்து அதனை வீடியோவும் எடுத்தார். அந்த இளைஞன் தனது தாய் உயிருடன் எரியும் போது பதிவு செய்து கொண்டே இருந்தான், கவலைப்படவில்லை அல்லது தீயை அணைக்க முயற்சிக்கவில்லை.சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உயிரைப் பணயம் வைத்து தீயை அணைத்து பெண்ணைக் காப்பாற்றினர். தீயை அணைத்த காவல்துறை அதிகாரியின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் அந்த பெண் 40 சதவீதம் தீக்காயங்கள் அடைந்துள்ளார், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்ப விசாரணையில் அந்த இளைஞன் தன் தாயை தீ வைத்தது உறுதியாகியுள்ளதாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
अलीगढ़ : खैर थाने में महिला को आग लगने का CCTV आया सामने
➡थाना परिसर में महिला को उसके बेटे ने ही लगाई थी आग
➡बेटे के द्वारा आग लगाने का सीसीटीवी फुटेज आया सामने
➡CCTV में महिला का बेटा मोबाइल से वीडियो बनाता दिखा
➡महिला का पति के मामा से चल रहा था जमीन का विवाद
➡थाना… pic.twitter.com/cBA6FrMXAO— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 16, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025