மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்! தனது தாத்தாவின் ஸ்ட்ரெட்சரை தள்ளி சென்ற 4 வயது சிறுவன்!
தனது தாத்தாவின் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு சென்ற 4 வயது சிறுவன்.
உத்திர பிரதேசம் மாநிலம், தியோரியா மாவட்ட மருத்துவமனையில், சேடி யாதவ் என்ற முதியவர் இரண்டு நாட்களுக்கு முன்பதாக காயமடைந்துள்ளார். இவரை அங்குள்ள அறுவை சிகிச்சை வார்டில் அனுமதித்துள்ளனர்.
அந்த வயதிகான முதியவரை, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்வதற்கு, அந்த வார்டு ஊழியர் அவர்களிடம் ரூ.30 கேட்டுள்ளார். இதனையடுத்து, அந்த முயவரின் மகள் பிந்து, தானே தனது தந்தையை ஸ்ட்ரெட்சரில் வைத்து இழுத்து சென்றுள்ளார். அந்த ஸ்ட்ரெட்சருக்கு பின்புறமாக, பிந்துவின் 4 வயது மகன் அதை தள்ளி கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தியோரியா மாவட்ட மாஜிஸ்திரேட் கவனத்திற்கு இந்த வீடியோ சென்ற நிலையில், அந்த வார்டில் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிந்து, ‘என் தந்தையின் ஆடை அணிவதற்காக ஸ்ட்ரெச்சரை வார்டுக்குத் தள்ள மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் ரூ .30 கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவரிடம் பணம் கொடுக்க மறுத்தபோது, அவர் ஸ்ட்ரெச்சரை தள்ள மறுத்துவிட்டார். எனவே மகன் சிவன் எனது உதவியுடன் அதை இழுக்க வேண்டியிருந்தது.’ என தெரிவித்துள்ளார்.
देवरिया, जहां से उ.प्र. राज्य सरकार में दो मंत्री आते है, वहां के जिला अस्पताल की ये हालत है कि पर्याप्त कर्मचारी नहीं है लोगों को स्ट्रेचर पर ले जाने के लिए। वार्ड भी अलग अलग नहीं बने हैं,जैसे कि ये महामारी इस अस्पताल के लिए मात्र एक साधारण फ्लू हो। ऐसे लड़ेंगे हम कोरोना से? pic.twitter.com/9CtymqFbWN
— Keshav Chand Yadav (@keshavyadaviyc) July 20, 2020