விரைவு ரயிலில் மோதி பறிபோன யானையின் உயிர்.. கண் கலங்க வைக்கும் வீடியோ!

அசாம் : மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை

Elephant killed

அசாம் :மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை மீது அந்த வழியாக வந்த கஞ்சன்ஜங்கா ரயில் வேகமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த யானை, நடக்க முடியாமல் தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்து இறந்தது. மோரிகானின் தெகெரியா பகுதியில் காட்டு யானை ரயில் பாதையை கடக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காட்டு யானை ரயிலில் அடிபட்டது தொடர்பான, கண் கலங்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த முறை இவ்வாறு நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

unknown node