காதலன் சந்தேகப்பட்டதால் 3 மாடி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!

காதலன் சந்தேகப்பட்டதால் 3 மாடி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 18 வயது இளம்பெண்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி எனும் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் சென்று உள்ளார். இந்நிலையில், இந்த சிறுமி ஹோட்டலில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இந்த சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து திருமணமான காதலனின் நண்பனை சந்திப்பதற்காக தங்களையும் திருமணமான ஜோடிகள் போல காண்பித்துக் கொண்டு ஹோட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தனது நண்பனுடன் தனது காதலி உடலுறவு வைத்ததாகக் சந்தேகப்பட்டு அந்த பெண்ணை திட்டியுள்ளார். மேலும், தனது நண்பன் முன்னிலையில் வைத்தே அந்த பெண்ணை அடித்தும் உள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தனது காதலனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காததால், தன் காதலனின் நண்பன் முன்னால் வைத்து மூன்று மாடிக் கட்டிடத்தின் ஜன்னலிலிருந்து குதித்துள்ளார். இதனையடுத்து காதலன் மற்றும் ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025