நீட் தேர்வில் டாப் 50 இல் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான் மாணவி முதலிடம்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவி  தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவி  தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இருவர் டாப் 50 இடத்திற்குள் வந்துள்ளனர்.அவர்களில் மாணவர் திரிதேவ் விநாயகா 30 வது இடத்தையும்,ஹரிணி 43 இடத்தையும் தேசிய அளவில் பிடித்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த மாணவர் ஆஷிஷ் பத்ரா  தேசிய அளவில் 2 ஆம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில் நேற்று முடிவுகள் வெளியாகின.