இறுதி நாள் பிரச்சாரம்… மேடையில் கண் கலங்கிய அண்ணாமலை.!

Annamalai file image

Annamalai : கோவையில் முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பின் ஈடுபட்ட போது பெற்றோர் பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து பேசிய அண்ணாமலை கண்கலங்கினார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று கோவையில் உள்ள கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த மேடையில் … Read more

உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது! அண்ணாமலை திட்டவட்டம்!

annamalai

Annamalai : உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், இன்று தான் பிரச்சாரத்தின் கடைசி நாள். எனவே, கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் … Read more

பிளஸ் 2 வரை இலவசக் கல்வி… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை!

students

Congress: 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் பா,சிதம்பரம் தாமையிலான குழுவினர் தறித்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் … Read more

நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை..!

Annamalai

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை என்ற தலைப்பில்  தமிழகம் முழுவதும்  நடைபயணம் மேற்கொண்டு பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வருகிறார். இந்நிலையில்,  ராணிப்பேட்டை அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது” என் மண் என் மக்கள் யாத்திரை நாளுக்கு நாள் எழுச்சி அதிகமாகிக் கொண்டு செல்கிறது. 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்று இந்த யாத்திரை … Read more

பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு..!

முதுநிலை பல்மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி MDS படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளதோடு அதற்கான ஹால் டிக்கெட்கள் மார்ச் 13ல் வழங்கப்படவுள்ளது. The National Board of Examinations in Medical Sciences (NBEMS), MDS பல்மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பத்தை … Read more

உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் “0” – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

NEET Cut off

உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக 2023ல் முதுகலை நீட் படிப்புகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. … Read more

நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

NEET EXAM

ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகுதான் பொறியாளர் அல்லது மருத்துவராக ஆவதற்கு நடத்தப்படும் JEE மற்றும் NEET தேர்வில் கலந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிர்காலத்தில் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக பெற்றோர்கள் பெரிய நகரங்களில் இயங்கி வரும்  JEE மற்றும் NEET பயிற்சி மையங்களில் சிறு வயதிலிருந்தே மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதனால் மாணவர்கள்  மன … Read more

ஜூலை 7ம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு!

NEET PG 2024

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்,  முன்னதாக மார்ச் … Read more

எங்களுக்கு சனிக்கிழமைகள் தேவைப்படுகிறது… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.!

Minister Anbil Mahesh

தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால  பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் P.E.T … Read more

நீட் தேர்வு இயக்கத்தில் கையெழுத்திட்டார் கவிஞர் வைரமுத்து..!

vairamuthu

கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து  இருந்தார். தீபாவளி … Read more