சூடான் தீவிபத்து – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது .இதில் 18

சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது .இதில் 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.படுகாயமடைந்த 130 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

unknown node

இதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,

சூடானில் உள்ள தொழிற்சாலையில் குண்டுவெடிப்பில், இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற  செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய  தூதரகம் வழங்கி வருகிறது  என்று பதிவிட்டுள்ளார்.