பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச.!

சீனாவில் தொடங்கி இருந்த கொரோனா வைரஸ் 127 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு

சீனாவில் தொடங்கி இருந்த கொரோனா வைரஸ் 127 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இதற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதிலளித்துள்ளார். கொரோனாவை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும், சார்க் நாடுகளின் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக, சகோதரத்துவ நாடு என்ற வகையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச.!