அதிகரிக்கும் உயிரிழப்புகள் : மகாராஷ்டிரா மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 169 பேர் உயிரிழப்பு..!

Heavy rains, floods and landslides in Maharashtra have killed at least 169 people and left 100 missing.

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 169 பேர் உயிரிழந்துள்ளனர், 100 பேர் காணாமல் போயுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.

இதுவரை பெய்துள்ள மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 169 பேர் உயிரிழந்து உள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.