கேரளா : வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ன்னும் 240 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சூரல்மாலா மற்றும் மேப்பாடியில் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 2,328 பேர் ஒன்பது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க ராணுவம், இஸ்ரோ, வனத்துறை, […]
கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]
வயநாடு நிலச்சரிவு : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, இலவச டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், […]
கேரளா : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்தது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 225 பேருக்கும் மேல் காணவில்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், […]
வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30-ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்த […]
வயநாடு நிலச்சரிவு : தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இன்று காலை வரை 150-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதனை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளது. இதில், உயிரிழந்த […]
நேப்பாளில் நிலச்சரிவு காரணமாக 13 பேர் பலி, 10 பேர் காணவில்லை, மீட்பு பணி நடைபெற்று வருவதாக தகவல்களுக்கு தெரிவிக்கின்றன. சனிக்கிழமை(செப் 17) நிலச்சரிவு காரணமாக மேற்கு நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் துணைத் தலைமை மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜால் தெரிவித்தார். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிலச்சரிவையடுத்து, உடனடியாக தேடுதல் மற்றும் […]
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 169 பேர் உயிரிழந்துள்ளனர், 100 பேர் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். இதுவரை பெய்துள்ள மழை வெள்ளம் […]
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல இடங்களில் இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
அடுத்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய குறைந்த காற்றழுத்த பகுதி வங்காள விரிகுடாவில் உருவாகிறது. இதனால், அடுத்த வாரம் தொடக்கத்தில் ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த முன்னறிவிப்பைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சமாளிக்க முழுமையான எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசு அந்தந்த மாவட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. இந்த, […]
வியட்நாமில் பெய்துவரும் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய வியட்நாம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை, என்று இயற்கை பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. 900 ஹெக்டேர் நெல் […]