EMI செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி

Default Image

வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இழந்த பொருளாதார மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, சுயசார்பு என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 4.40% லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வங்கிக் கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அதாவது, வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது. 

மேலும், ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை என்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி வழங்கப்படும் என்றும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்