டெல்லி : ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா நிதி, வரிவிதிப்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை வைத்திருக்கிறார். இந்த சூழலில், அவருக்கு ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராகும் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, மத்திய வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்கவுள்ளார். எனவே, டிசம்பர் […]
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது ஆளுநர் பதவிக்காலம் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் , 2024 – 2025ஆம் ஆண்டின் பணவீக்கம் பற்றி பல்வேறு தரவுகளை குறிப்பிட்டார். பணவீக்கமானது எந்தெந்த துறைகளில் எவ்வாறு இருக்கும் என கணித்து அதனை கூறி வருகிறார். அவர் கூறுகையில், நாங்கள் இப்போது பணவீக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் எனும் CPI பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. […]
Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும். நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் […]
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது […]
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் […]
கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% (50 basis points) உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் 7% ஆக நீடிக்கும் சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த 4-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது […]
ரெப்போ (4%) மற்றும் ரிவர்ஸ்-ரெப்போ (3.35%) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகியக் கால கடன் (ரெப்போ) வட்டி விகிதத்தில் (4%) மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது: “பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது.இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை.மேலும்,MSF […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவிப்பு. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு […]
இனி IMPS மூலம் ரூ.2 லட்சம் பதில் ரூ .5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இரு மாத பணக் கொள்கை மறுஆய்வு அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் வங்கி ரெப்போ விகிதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்ற ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்திய […]
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இரண்டாவது அலை முதல் அலைகளை விட ஆபத்தானது என்று அவர் கூறினார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செய்தியாளர் கூட்டத்தில், முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறினார். நல்ல பருவமழை […]
இந்திய ரிசர்வ் வங்கியின் (ரிசர்வ் வங்கி) நாணயக் கொள்கைக் குழு கூட்டம் இன்று முடிவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், குழு எடுத்த முடிவுகளை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். அதில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.15 சதவீதம் குறைத்துள்ளதாகவும் கடைசியாக மே மாதத்தில் 0.40 சதவீதமும், மார்ச் மாதத்தில் 0.75 சதவீதமும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன என தெரிவித்தார். கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இப்போது […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது இரு மாத நாணயக் கொள்கை இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இரு மாத நாணயக் கொள்கை உரையின் போது முக்கிய கொள்கை அறிவிப்பை வெளியிடுவார். பணவீக்கத்தை எதிர்கொண்டு பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக வட்டி விகிதங்களைக் குறைப்பதாக தாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு இன்று குழுவின் முடிவுகளை அறிவிக்கும் […]
வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இழந்த பொருளாதார மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, சுயசார்பு என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். […]
அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல். கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டமாக அந்த திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நிதியமைச்சரின் அறிவிப்புகக்கு பின்னர் […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதாரம் சூழ்நிலை, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். அதில், மாநில அரசுகள் கூடுதல் கடன் பெரும் வசதிக்காக ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகையின் ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், 4 சதவீதமாக இருந்த ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த […]
இந்தியா தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்குஅதாவது கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14 நாட்களுக்கு அதாவது மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து வருகிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிப்பு. வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 5.15%ல் […]