கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசிய உறவினர்கள்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது நின்று ஆற்றில் வீசிய உறவினர்கள்.
உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை கோட்வால் என்ற இடத்தில் ராப்தி ஆற்றின் பாலத்தில் உறவினர்கள் இருவர் நின்றுகொண்டு ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்படி, இறந்தவர் பிரேம்நாத் என்றும் அவர் சோக்ராத்பேட்சித்ரதா என்ற நகரில் வசிப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரேம்நாத் என்பவர் கடந்த 25 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மேலும், இவர் 28 ஆம் தேதியன்று இறந்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, பிரேம்நாத்தின் உடலை புதைக்கும் படி அவரின் உறவினர்களிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், உறவினர்கள் அவரின் உடலை ஆற்றில் வீசியுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)
INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!
February 11, 2025![India vs England 3rd ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/India-vs-England-3rd-ODI-.webp)