திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து கலெக்டர் ஷ்ரேயா சிங் பார்வையிட்டுள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சத்தியபாமா, தடுப்பூசி பிரிவு மருத்துவர் மோகனா ஆகியோரும் உடனிருந்துள்ளனர். அப்பொழுது பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் மற்றும் பொது நோயாளிகள் பிரிவு […]
மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்து வரும் முன்களப்பணியாளர்களின் சேவை அனைவரது நெஞ்சையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா தொற்றால் நாடே பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் என இவர்களின் அயராத சேவை மற்றும் உழைப்பு நாட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முன்களப்பணியாளர்களின் செயல் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகள் மன அளவில் […]
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு […]
கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது நின்று ஆற்றில் வீசிய உறவினர்கள். உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை கோட்வால் என்ற இடத்தில் ராப்தி ஆற்றின் பாலத்தில் உறவினர்கள் இருவர் நின்றுகொண்டு ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, இறந்தவர் பிரேம்நாத் என்றும் அவர் சோக்ராத்பேட்சித்ரதா என்ற நகரில் வசிப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரேம்நாத் […]
தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. அதன்பிறகு, அடுத்தநாளே இவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாரா விதமாக […]
உத்திரப்பிரதேச மாநிலத்தின்,காசியாபாத்தில்,மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதித்த 59 வயதான கொரோனா நோயாளி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து,வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவத் தொடங்கியது. இந்நிலையில்,உத்திரப்பிரதேசத்தின்,காசியாபாத் […]
உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அமன்தீப் […]
சேலத்தில் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு காரில் வேகமாக சென்ற இளைஞர் பல சாலை தடுப்புகளை இடித்து தள்ளியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர். இவர் ஒரு கட்டிட தொழிலாளர். இவரின் சகோதரிக்கு கொரோனா பாதிப்பு காரணமாக திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரியை அழைத்துக்கொண்டு அவரது பலேனோ காரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது, சகோதரியை அடிக்கடி கவனித்து […]
பெங்களூர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவருடன் இணைந்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூர் நகரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதியுற்றுள்ளார். பல போராட்டத்திற்கு பிறகு இவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்துள்ளது. பின்னர் சிகிச்சையை முறையாக எடுத்துக்கொண்டு குணமடைந்துள்ளார். குணமடைந்து வீடு திரும்பும் உற்சாகத்தில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இவர்கள் […]
யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த சடலங்களால் பீதியில் ஆழ்ந்துள்ள, குடியிருப்புவாசிகள். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் […]
நாக்பூரிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றதால் வியாழக்கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.குழுவினரும் நோயாளியும் பாதிப்பில்லாமல் தப்பினர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா நோயாளிகளை உடனடியாக பிற மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,சி -90 விடி-ஜில் என்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நாக்பூரில் […]
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை கட்டுப்படுத்த […]
கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் இணைந்து பல குரல்களில் பேசி நோயாளிகளை குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் இதிலிருந்து மீண்டும் வருகின்றனர். கொரோனா பாதிப்பின் அறிகுறி இருப்பினும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருப்பதும் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்வதும், சிலர் தப்பி செல்வதும் போன்ற விபரீதங்கள் […]
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார். அந்த முதியவர் காணமால் போனதை அறிந்த அவரின் மகன், […]
கொரோனா பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் உள்ள உகானில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்வை விட அதிகமான சர்க்கரை அளவு இருந்தால் தான் அதிக உயிரிழப்பு நடப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. உகான்நகரில் உள்ள அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக யூனியன் மருத்துவமனை மற்றும் டோங்கி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யிங் ஜின் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை டயாபெடாலாஜியா என்ற இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இந்த ஆய்வுக்காக உயிழந்த 114 கொரோனா நோயாளிகள் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்சப் குரூப். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரசால், தமிழகத்தில் 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதிலும் சென்னையில் ராயப்பேட்டையில், அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை உதவி கமிஷனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக வாட்ஸ் […]
கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே வாரியம், கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிறப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை டெல்லி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அனுப்பியுள்ளது. இந்த […]
டீ குடிக்க சென்ற கொரோனா நோயாளி. அதிர்ச்சியில் காவல்துறையினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]
தஞ்சையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் வீடு திரும்பினார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் 10 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் பெங்களூரை சார்ந்தவர்கள் , கலாபுராகி இரண்டு பேர் சார்ந்தவர்கள் மேலும் கலபுராகி சார்ந்த ஒருவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 நபர் கொரோனாவால் பாதிப்பதற்கு முன் எங்கு சென்றார்என்ற விபரம் வெளியாகி உள்ளது. அவர் மார்ச் 6 ஆம் தேதி, நோயாளி அமெரிக்கன் ஏர்வேஸால் சான் அன்டோனியோவிலிருந்து டல்லாஸுக்கு பயணம் செய்தார். மார்ச் 7 ஆம் தேதி, டல்லாஸிலிருந்து அமெரிக்கன் […]