கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – மத்திய அமைச்சர்

A guideline will soon be issued regarding the restrictions on images and series that are published on the OTT site.

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படும்.

ஓடிடி தளத்தில் வெளியாய்கும் சிலதொடர்கள், படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருகின்றன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் பல படங்கள் வெளியாக மிகவும் சிரமத்தை சந்தித்தது. பின்னர் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஓடிடி தளம் ஏற்கனவே இருந்து வந்தாலும், இந்த கொரோனா மற்றும் ஊரடங்கள் காலகட்டத்தில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.

குறிப்பாக ஓடிடி தளத்தில் திரைப்படம் நேரடியாக வெளியாகி வருகிறது. தணிக்கை செய்யாமல் வெளியாகி வருவதாகவும் குற்றசாட்டு எழுந்து வண்ணம் உள்ளது. இதன் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.