டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது – பாஜக எம்.பி!

BJP MP Akshaywar Lal Gond has said that the protesters in Delhi are not real farmers and are getting money from abroad.

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என பாஜக எம்.பி அக்‌ஷய்வர் லால் கோண்ட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்தரபிரதேச மாநிலம் பரைச் தொகுதி பாஜக எம்பி அக்‌ஷய்வர் லால் கோண்ட் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகள் அல்ல, அவர்கள் சீக்கியர்கள் மற்றும் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் உண்மையான விவசாயிகளாக இருந்தால் நாட்டில் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை சந்தைக்கு வந்திருக்காது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இவர்கள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி போராட்டம் நடத்தக் கூடிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். மேலும் போராட்டம் நடத்தக் கூடிய பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஒரு கொள்ளைக்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.