டெல்லி : பயிர்களுக்கு ஆதார விலை (MSP) கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் 101 பேர் அடங்கிய குழுவினர் இன்று தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக புறப்படுவதாக முன்னர் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அவர்கள் ஹரியானா – டெல்லி மாநில எல்லையான ஷம்பு பகுதிக்கு வந்தனர். அவர்களை டெல்லி நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். […]
இலங்கை : இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ள நிலையில், அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் உடனே தள்ளுபடி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்களிப்புக்கு இலங்கை தயாராகி வருகிறது. நாளை தபால் வாக்கு பதிவு மூலம் அரச அதிகாரிகள் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி […]
சென்னை: தமிழக விவசாயிகள் உடனடியாக குறுவை பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக விவசாயிகள் தங்கள் குறுவை பயிர்களை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் உரிய முறையில் கட்டணம் செலுத்தி பயிர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய தமிழக வேளாண்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். 2024-2025ஆம் ஆண்டில் குறுவை, சம்பா மற்றும் கோடை […]
கிசான் சம்மன் நிதி யோஜனா : நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசின் ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.6,000 பணத்தை 3 தவணைகளாக (ரூ.2,000 வீதம்) வழங்கி வருகிறது. இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. […]
congress : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடன் தள்ளுபடி, MSP சட்டம், பயிர்க் காப்பீடு என விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அள்ளி வீசியுள்ளார். இதற்கு முன்பு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வாக்குறுதிகளை அளித்த நிலையில், இன்று விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு! மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ நியாய […]
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை […]
விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது ஹரியானா அரசு. குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்பினர் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 12ம் தேதி சலோ டெல்லி என்ற பேரணி போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு என்ற பகுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். […]
விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், விவசாய கடன் தள்ளுபடி, மின்சாரம் திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் டெல்லி சலோ பேரணியை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி குவிந்து வருகின்றனர். இருப்பினும், […]
தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், விவசாயிகளுக்கு மானியம், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-2024 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடியும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடியும் ஒதுக்கீடு […]
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம். தமிழக வேளாண் பட்ஜெட் பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட […]
புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும். தற்காலியமாக ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக […]
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் […]
பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் […]
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில், பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கனஅடியிலிருந்து 9,347 […]
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடிக்கு குறைந்துள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல. ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் […]
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் […]
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினனாரின் கோரிக்கையை ஏற்று, கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மேலும் […]