அடுத்த வருடம் இந்நிறுவனத்தில் 2000 பேருக்கு வேலை இல்லையா?! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
- இந்தியாவில் தற்போது வளர்ந்து சேவை நிறுவனமாக இருக்கிறது ஓயா நிறுவனம்.
- இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 2384 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
நாட்டில் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆட்குறைப்பு அவ்வபோது அறிவித்து வருகின்றனர். அதேபோல கட்டாய விடுப்பு நாட்களையும் அறிவித்து வருகின்றனர். இந்த பொருளாதார மந்தநிலை தற்போது சேவை நிறுவனங்களையும் தாக்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது வளர்ந்துவரும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஓயோ நிறுவனம் ஜனவரி மாதம் முதல் சுமார் 2,000 வேலை ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வெளியாகவில்லை.
அந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் நஷ்டமானது 2384 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நஷ்டமானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. ஆதலால் இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக தற்போது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல் பரவி உள்ளது.