வாட்சப் குரூப்பில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ! கோவா துணை முதல்வருக்கு வந்த சோதனை!

Default Image

கோவா துணை முதல்வரின் கைபேசியில் இருந்து பகிரப்பட்ட ஆபாச வீடியோ.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் அடிமையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கோவாவின் துணை முதல்வரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் போனில் இருந்து, நேற்று அதிகாலை 1:20 மணியளவில், ‘VILLAGES OF GOA’ என்ற வாட்சப் குரூப்பில் ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர், மகளிர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் மீது புகார் கொடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து, துணை முதல்வர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது ஹேக்கர்களின் வேலை. அந்த வீடியோ பகிரப்பட்டுள்ள வாட்சப் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். விஷமிகள் சிலர், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளனர். அந்த வீடியோ பகிரப்பட்ட நேரத்தில், நான் எனது போனை உபயோகப்படுத்தவே இல்லை. அப்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்