இந்தியாவில் ஆன்லைன் கற்றல் அகாடமியை மூடும் பிரபல நிறுவனம்.!

Default Image

அமேசான் தனது ஆன்லைன் கற்றல் தளமான அமேசான் அகாடமியை இந்தியாவில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி, போட்டித்தேர்வு, மற்றும் நுழைவுத்தேர்வுக்கு பயிலும்  மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்கு சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.

இதற்காக பல்வேறு ஆன்லைன் கற்றல் தளங்கள் அமைக்கப்பட்டன. இதில் அமேசானால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளம் தான் இந்த அமேசான் அகாடமி. ஆகஸ்ட் 2023 முதல் இந்தியாவில், தனது கற்றல் சேவை தளத்தை நிறுத்தப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களுக்கு அவர்களின் முழு பணமும் திரும்ப தரப்படும் என்று தெரிவித்துள்ளது.

2019 முதல் அமேசான் தனது கல்வி தளத்தை சோதித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அமேசான் நிறுவனம் தனது செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமேசான் அகாடமியை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்