மது போதையில் பெண்ணின் மீது காரை ஏற்றிய காவலர் கைது
டெல்லியின் சில்லா கிராமம் அருகே ஒரு பெண் சென்று கொண்டிருக்கும்போது கண்முடி தனமாக ஒரு கார் அந்த பெண்ணை தூக்கி வீசியதை அருகில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண்ணை ஏற்றியது மட்டும்மில்லாமல் அருகில் இருப்பவர்கள் அந்த காரை நிறுத்த முயன்றாலும் அந்த கார் நீற்க்காமல் வேகமாக அந்த பெண்ணின் மீது ஏற்றி சென்றது.
இந்நிலையில் அந்த பெண் மீது காரை ஏற்றியவர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது விசாரணையில் அவர் மது போதையில் இருந்தாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் கூறுகின்றனர்.
unknown node