பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் – ராகுல் காந்தி

டெல்லியில் ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார்.
அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி, இந்தியாவில் அதனை இருமடங்கு விலைக்கு விற்கிறார் அதானி. பிரதமர் மோடி, அதானி குழுமத்தைப் பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடுகள் நடத்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து பிரதமர் இதுவரை வாய்திறக்காதது ஏன்? அதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி யார்?’ என்பதை இந்திய நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் பிரதமர் நரேந்திர மோடி நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்.
இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறை கேடு நடந்திருப்பதாகவும் இதன் பின்னணியில் அதானி இருப்பதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் பினான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பதாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025