சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – பிரதமர் மோடி

Prime Minister Narendra Modi tweeted praising the 114th birth anniversary of the pasumpon Muthuramalingam thevar.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து ட்வீட்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை தேவர் ஜெயந்தியின் சிறப்பு நாளில் நினைவு கூர்கிறேன்.

முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் என்று புகழாரம் சசூட்டியுள்ளார்.

unknown node