பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் கைது!

Four people, including parents, have been arrested in Delhi for trying to sell a six-day-old baby boy for Rs 3.6 lakh.

பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் உட்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி குருகிராமிலுள்ள நாராயணா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி கோவிந்த் குமார் மற்றும் அவரது மனைவி பூஜா தேவி ஆகியோருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தை இல்லாத தம்பதியினர் ஒருவருக்கு தங்களது குழந்தையை விற்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அதன் பின்பு குழந்தை பிறந்த பின்பதாக 3.60 லட்சத்திற்கு தனது குழந்தையை விற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்நிலையில், போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்ற பெற்றோர்கள் மற்றும் குழந்தையை பெற்றுக் கொண்டவர்கள் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை பிறந்த பின்பதாக காசோலை மூலமாக இவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு உள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 363 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் பெற்றோர்களிடமிருந்து இரண்டு காசோலைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.