விண்ணைமுட்டும் பத்மாவத் திரைப்படத்தின் வசூல்!கடும் எதிர்ப்புக்கிடையே சாதனை …
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது .
சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு ராஜ்புத் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
ஒருசில மாநிலங்கள் படத்தைத் திரையிட விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. திரையிட்ட முதல் நாளில் 19கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 32கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் 27கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. நான்காம் நாளான ஞாயிற்றுக் கிழமையுடன் மொத்த வசூல் 110கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
இத்தனைக்கும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் காரணமாகப் பெரும்பாலான திரையரங்கங்களில் பத்மாவத் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)