இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் BSNL-ன் புதிய லோகோவையும், 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்று, அக்.-22 (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இன்று டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், BSNL-ன் இந்த புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார்.
புதிய லோகோ :
அதன்படி, பழைய லோகோவில் சாம்பல் நிறத்தில் இருக்கும் வட்டத்தை சுற்றி சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் இருந்த வளைந்த குறிகள் இருக்கும். மேலும், BSNL என்ற பெயரின் கீழ் connecting to India (கனெக்ட்டிங் டூ இந்தியா) என எழுதப்பட்டிருக்கும்.
தற்போது மாற்றப்பட்ட அந்த புதிய லோகோவில், காவி கலரில் வட்டமும், அந்த வட்டத்திற்குள் இந்திய நாட்டின் வரைபடமும், பின் அதற்கு மேல வெள்ளி மற்றும் பச்சை நிறத்தில் குறிகளும் இருக்கிறது. மாற்றப்பட்ட அந்த புதிய லோகோவை பார்க்கையில் அது நமது தேசிய கோடியை ஞாபகப்படுத்வத்தை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், Connecting to India என்ற வாக்கியமும் தற்போது Connecting to Barat (கனெக்ட்டிங் டூ பாரத்) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7 புதிய சேவைகளையும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
7 புதிய அம்சங்கள் :
அதன்படி,
- ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க்
- பிஎஸ்என்எல் ஐஃஎப்டிவி (BSNL IFTV)
- டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி
- பைபர் டு தி ஹோம்
- பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை
- என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ்
- நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க்
போன்றவை இதில் அடங்கும். இதில், நடைமுறையில் மிகத் தேவையாக இருக்கும் சேவையாக குறிப்பிட்டு சொன்னால் ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க்கை சொல்லலாம். இதன் மூலம் பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கிறது.
அதே போல, டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி என்ற சேவையின் மூலம் பயனர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மற்றும் நிலத்தில் உள்ள மொபைல் நெட்வொர்குகள் மூலம் பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.