#Budget2021 : 2023-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வழித் தடங்களும் மின் மயமாக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

National Rail Plan 2030 prepared, broad routes set to be 100% electrified by 2023

ரயில்வே துறைக்கு முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது, சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படு.ம் அகல ரயில்பாதை வழித்தடங்கள் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100% மின்மயமாக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும். 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.ரயில்வே துறைக்கு1,10,055 கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.