மும்பை : 15 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய 2 பேர் கைது ...!

Two arrested for smuggling heroin worth Rs 15 crore in Mumbai

மும்பையில் 15 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தி சென்ற இருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் வசித்து வரக்கூடிய இந்த இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதை பொருளை கடத்தி விற்பனை செய்வதற்காக மும்பை வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து, தற்பொழுது இவர்கள் இருவரையும் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.