ராம் விலாஸ் பஸ்வான் உடலுக்கு மோடி, ஜே.பி.நட்டா மற்றும் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி..!

Default Image

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம் விலாஸ் பஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்