400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் சிறுமி கர்ப்பம் ....!

A married minor girl who was raped by 400 people, including police, is pregnant.

போலீசார் உட்பட 400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமாகிய மைனர் சிறுமி கர்ப்பமாக உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தின் அம்பேஜோகை எனும் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் உயிரிழந்த நிலையில், அவர் திருமண வயதை எட்டுவதற்கு முன்பதாகவே சிறுமியின் தந்தை அவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த சிறுமி, தன் மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கணவர் வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் தந்தை வீட்டிற்கே வந்துள்ளார்.

பின் தனது எதிர்காலத்தை குறித்து யோசனை செய்த சிறுமி, வெளியில் சென்று வேலை தேட ஆரம்பித்துள்ளார். அப்பொழுது சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆரம்பத்தில் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின் சிறுமி பல இடங்களில் தனது நிலைமையை எடுத்துக்கூறி வேலை தேடி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வேலை தேடி சென்ற இடங்களிலெல்லாம் 6 மாதத்தில் சிறுமி 400-க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பாக அம்பேஜோகை நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற போது, அங்கும் சில காவலர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி இதுவரை 400-க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளதாகவும், தற்பொழுது சிறுமி 20 வார கர்ப்பிணியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.