'மியா கலிஃபா நல்லா இருக்கணும்'..! முதியவர் செய்த காரியம்...வைரலாகும் வீடியோ!

வடமாநிலத்தில், பெண்கள் செய்யும் 'கர்வா சௌத்' எனப்படும் விரதத்தை முதியவர் ஒருவர் செய்த வீடியோ சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Mia Khalifa

டெல்லி :வடமாநிலங்களில், விளையும் பயிர்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது கோதுமை தான். மேலும், கோதுமை தான் அங்கு அதிகமாகவே விளையும். இந்த விளைச்சலின் போது கணவன் நன்றாக இருக்க வேண்டும், தொழில் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பெண்கள் “கர்வா சௌத்” எனப்படும் விரதத்தை மேற்கொள்வார்கள்.

ஐப்பசி மதத்தின் நான்காவது நாளில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தில் காலை முதல் இரவு வரை பெண்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள். அதன் பின், இரவு நேரத்தில் சல்லடை வழியாக நிலவைப் பார்த்து அந்த விரதத்தை முடித்து விடுவார்கள். இப்படி செய்வதனால் தங்களது கணவர்கள் நன்றாக இருப்பார்கள் என ஒரு நம்பிக்கை அங்கு இருந்து வருகிறது.

அதன்படி, தற்போது ஒரு முதியவர் ஆபாச நடிகை ‘மியா கலிஃபா’ நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த “கர்வா சௌத்” விரதம் இருந்துள்ளார். மேலும், அன்றைய நாள் இரவில் மியா கலிஃபாவின் புகைப்படத்தை பார்த்து அந்த விரதத்தை முடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், அந்த வீடியோவுக்கு கமெண்டில் ஒரு சிலர். ‘இது வேடிக்கையாகவே உருவாக்க பட்டுள்ளது. இதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், மற்றும் ஒரு சிலர், ‘விளையாட்டுக்கு எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் மத உணர்வுகளை ஏன் புண்படுத்த வேண்டும்’ என கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

unknown node