பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து மம்தா பானர்ஜிக்கு பயம் வந்து விட்டது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தாகூர் நகரில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி , கிராமங்கள் , விவசாயிகளை மம்தா பானர்ஜி புறக்கணிக்கின்றார் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் மற்றும் மம்தா பானர்ஜி பாஜக_வின் வளர்ச்யை பார்த்து பயம் வந்து விட்டது . மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அவர் வன்முறையை தூண்டி விடுகின்றார் என அவர் குறிப்பிட்டார்.