காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி வரைபடம் வெளியீடு! தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு.!

ஜம்மு & காஷ்மீர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாசி மாவட்டத்தில்ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 53 பேர் பயணித்த பேருந்து

J-K Police terrorist

ஜம்மு & காஷ்மீர்:கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாசி மாவட்டத்தில்ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 53 பேர் பயணித்த பேருந்து மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர். இந்த தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் ஓவியத்தை வெளியிட்டுள்ளனர்.

unknown node

மேலும், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் விளக்கத்தின் அடிப்படையில் பயங்கரவாதியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.