ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் மனைவி புற்றுநோயால் உயிரிழப்பு.! 

சென்னை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் இன்று மும்பை மருத்துவமனையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

Naresh Goyal - Anita Goyal

சென்னை :ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் இன்று மும்பை மருத்துவமனையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா கோயல் இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது,

அனிதா கோயலின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நரேஷ் கோயல் – அனிதா தம்பதிக்கு நம்ரதா மற்றும் நிவான் கோயல் என இரு குழந்தைகள் உள்ளனர். பணமோசடி வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் கடந்த செப்டம்பர் 1, 2023 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த மே 6ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

அனிதா கோயலை போலவே நரேஷ் கோயலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ காரணங்களை கூறி நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் ஜாமீன் பெற்று இருந்தார். இதே பண மோசடி புகாரில் அனிதா கோயலும் கடந்த நவம்பர் 2023இல் கைது செய்யப்பட்டு உடல்நிலை கருத்தில் கொண்டு அன்றைய தினமே ஜாமீன் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.