சென்னை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் இன்று மும்பை மருத்துவமனையில் புற்றுநோயால் உயிரிழந்தார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா கோயல் இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது, அனிதா கோயலின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நரேஷ் […]
கனரா வங்கி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்தது. இதனை எடுத்து இந்த புகார் தொடர்பாக இந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா உட்பட ஐந்து பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முன்னதாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், நேற்று மும்பை […]
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் எத்தியாட் விமான நிறுவனத்திடம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில பல மாதங்களாகவே மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த கடன் பிரச்சணையால் தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.இந்த நிலையிலும் ஜெட் ஏர்வேஸ் தனது நிறுவனத்தை […]
ஏர்ஏசியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காகப் புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இருந்ததைவிட இந்த ஆண்டில் 18விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் எண்பது டாலருக்குள் தொடர்ந்து இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 15விழுக்காடு அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு 75 போயிங் 737வகை விமானங்களை வாங்க […]
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஹாங்காங் புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமான பணிப்பெண்களின் உடைமைகளும் சோதனையிடப்பட்டன. அவர்களில் ஒருவரின் பெட்டியில், இந்திய மதிப்பில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஹவாலா பணம் என்றும், ஹாங்காங் கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். சம்பந்தப்பட்ட விமானப் பணிப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், […]
மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி சக பெண் விமானியை கன்னத்தில் அறைந்ததால் அந்தப் பெண் விமானி கண்ணீருடன் காக்பிட் அறையை விட்டு வெளியேறினார். கடந்த ஒன்றாம் தேதி, அந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் இப்பிரச்சனை அப்போதைக்கு முடிவுக்கு வந்து விமானம் மும்பை வந்து சேர்ந்தது. இந்நிலையில், உயரதிகாரிகளிடம் இருவரும் முறையிட்டதால், இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…இதனால் பயணிகள் கடும் […]