ராமர் கோவில் விழா : கலந்து கொள்ளும் தமிழக பிரபலங்கள் யார்?

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று திறக்கப்படவுள்ளது. கோவிலின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கிறார். கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவில் அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சினிமா பிரபலங்களை பொறுத்தவரையில். ரஜினிகாந்த், தனுஷ், ஆகியோர் தமிழகத்தில் இருந்து கலந்துகொள்வதாக தெரிகிறது. கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கலந்துகொள்கிறார்.
ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி பற்றிய முழு விவரம்..!
இவர்களை தவிர கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில், ராகுல் டிராவிட், கங்குலி, வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், சசச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா பிரபலங்களை பொறுத்தவரையில் அக்சய் குமார், அமிதாப் பச்சன், ராம் சரண், விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா, ரன்பீர் கபூர், கங்கனா ரணாவத், ஆலியா பட், அனுபம் கேர், உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முரளி மனோகர் ஜோஷி, கௌதம் அதானி, மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி, அம்பானி, இஸ்ரேல் தலைவர் சோம்நாத் என 506 விவிஐபிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களால் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025