#BREAKING : கொரோனா வைரஸ் எதிரொலி-சீனர்களுக்கு இ-விசா தற்காலிகமாக நிறுத்தம்

சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய

சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில்  304 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கொரோனா வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது,சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.