மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் விசா காலாவதியான பிறகு நாட்டில் வசித்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 54,576 ஆகவும், 2020 இல் 40,239 ஆகவும் இருந்தது. விசா காலாவதியான பிறகு இந்தியாவில் தங்கினால் அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மீண்டும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் விசா காலாவதியான பிறகு தங்கியிருந்தால் முதல் 15 நாட்களில் அபராதம் இல்லை, 16 நாட்கள் முதல் 30 நாட்கள் […]
உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பதாக ரஷ்யா குற்றசாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தெளிவான போர் திட்டங்களை வகுத்து வருகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய கூட்டமைப்பு மீது நேரடியான பாதுகாப்பு அச்சறுத்தலை மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் உக்ரைன் ராணுவ குழுவினர் தற்போது வரை அமெரிக்காவின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கின்றனர், ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், […]
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம் என மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசு தலைமை […]
2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை தடுக்கும் வண்ணமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடு செல்பவர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே, மற்ற நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து, வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் […]
சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதி. கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் சீனா சொல்லும் அளவிற்கு வெற்றியடைந்த நிலையில், நாட்டிற்கான நுழைவு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலால் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய குடிவரவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 28 க்குப் பிறகு மூன்று பிரிவுகளில் […]
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி வர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி வர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிக அளவிலான தமிழர்கள் சொந்த நாடான தமிழகத்துக்கு திரும்ப விண்ணப்பித்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், ஐரோப்பியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளிலிருந்து தமிழகம் […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, குவைத், இலங்கை மற்றும் ருவாண்டா என 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஈரானில் 255, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 12, இத்தாலி 5, ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கையில் தலா 1 உட்பட 276 இந்தியர்கள் வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி […]
சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு […]