உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது – WHO விஞ்ஞானி!

WHO scientist Soumya Swaminathan says India is becoming the world's pharmacy.

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது என WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தற்பொழுது இந்தியாவில் குறைந்துள்ளதாகவும், வரப்போகும் மாதங்களில் இன்னும் கவனமுடன் கொரோனா பரவலை கையாள வேண்டும் எனவும், அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா போலியோ ஒழிப்பு மற்றும் வேறு சில நோய்களுக்கும் தடுப்பூசி தயாரிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், கடந்த 75 ஆண்டுகளாக உலகின் மருந்தகமாக இந்தியா இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.