அடடா …., 96.6 கோடிக்கு ஏலம் போன ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி!

தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி 96.6 கோடி ஏலத்திற்கு விற்பனையாகியுள்ளது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது சார்பில் கோட்பாடு மூலமாக அனைவரையும் வியக்க வைத்தவர். தற்பொழுதும் மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாடுகள் கொண்ட பிரதி பாரிஸ் நகரில் உள்ள ஏல நிலையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விடப்பட்ட இந்த பிரதி எதிர்பார்க்காத அளவுக்கு … Read more

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது – WHO விஞ்ஞானி!

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது என WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்பொழுது இந்தியாவில் குறைந்துள்ளதாகவும், வரப்போகும் மாதங்களில் இன்னும் கவனமுடன் கொரோனா பரவலை கையாள வேண்டும் எனவும், அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா போலியோ ஒழிப்பு மற்றும் வேறு சில நோய்களுக்கும் தடுப்பூசி … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி கருத்து..!

பள்ளிகளை திறப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொண்டு வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் போன்றவை திறக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் … Read more

1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானி!

1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சாதாரணமாக ஒரு கொசு நமக்கு கடித்தாலே கொசு கடித்து விட்டது என்று அடித்துவிட்டு பலமுறை அந்த இடத்தை சொரிந்து கொண்டே இருப்பதுதான் மனிதர்களாகிய நமது வழக்கம். இந்த கொசுவால் ஒரு நிமிட வலி மட்டுமல்ல மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா வைரஸ் மற்றும் மஞ்சள் காமாலை என பல்வேறு நோய்கள் வருகிறது. இதனால் பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த கொசுக்கள் … Read more

கீழடி ஆராய்ச்சியில் 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் ஐந்து அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் கீழடியில் மட்டுமல்லாமல் கீழடி சுற்றி இருக்கக் கூடிய கொந்தகை, அகரம், மணல் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட … Read more

கொரோனா வைரஸை கொல்லக்கூடிய காற்று வடிகட்டி! விஞ்ஞானிகள் அசத்தல்!

கொரோனா வைரஸை கொல்லக்கூடிய காற்று வடிகட்டி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,625,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562,820 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில், இந்த வைரஸ் பாதிப்பால், 822,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,144 பேர் உயிரிழந்துள்ளனர். ஈலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள்  கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையடுத்து,  கொரோனா வைரஸைப்  “பிடிக்கவும் … Read more

புதிதாக கண்டறியப்பட்ட மீனுக்கு மணிப்பூர் பேராசிரியரின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்!

புதிதாக கண்டறியப்பட்ட மீன் ஒன்றுக்கு மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விசுவநாத் வைகோமியா அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள். மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கு காட்டில் ஒரு புதிய வகை நன்னீர் மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மீனுக்கு வைகோமியாஹீரா என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதாவது வைகோமியா என்பது மணிப்பூரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன் வைகோமியா அவர்களின்  நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிரா என்றால் வைரம் என்றும் குறிப்பிட்டு அந்த … Read more

ஊரடங்கு காலத்தில் காதலியுடன் இருமுறை சந்தித்த விஞ்ஞானி… எழுந்த சர்ச்சயை தொடர்ந்து பதவியை இழந்தார்…

உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன் மறையாத நாடான இங்கிலாந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அங்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வடிவத்திலான உடற்பயிற்சிக்காகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியும் என்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. … Read more

கொரோனா வைரஸ் ஆராய்ச்சிய்ன் முடிவில் இருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை…

உலகம் முழுவதையும் தனது கோர பிடியில் சிக்க வைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தப்ப உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் தற்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுட்டு கொல்லப்பட்ட ஆராய்ச்சியாளர் பெயர் டாக்டர் பிங் லியு என்பதாகும். இவர்,  கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் தலை மற்றும் கழுத்துப் … Read more

எச்சரிக்கை.! வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்த்தால் இவ்வளவு பாதிப்பா.?

வருகின்ற 26-ம் தேதி தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு நிகழவுள்ள வளைய வடிவ சூரிய கிரகணம்.  இதை வெறும் கண்களால் பார்த்தால் பார்வை பாதிப்பு ஏற்படும் என்று சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வளைய வடிவ சூரிய கிரகணம் நிகழவுள்ளது. மேலும் இது காலை 9:30 மணிக்கு கோவை, உதகை, திருச்சி, புதுக்கோட்டை முதலிய இடங்களில் சூரிய கிரகணம் நன்கு தெரியும், என சென்னை கிண்டியில் உள்ள … Read more