டெல்லி :இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தகத் தடைகளை நீக்கி, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்து, இரு நாடுகளின் குழுக்களும் விரைவில் பேச்சுவார்த்தைகளை முடிக்க பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார்.
ஆம், வரும் வாரங்களில் எனது சிறந்த நண்பர் பிரதமர் மோதியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது பதிவில், ”எனது நண்பர் பிரதமர் மோடியுடன் அடுத்த வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்க பேச்சுவார்த்தை தொடர்கின்றன, இணக்கமான தீர்வை அடைவதில் இரு நாடுகளுக்கும் எவ்வித சிரமமும் இருக்காது என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் உடன் பேச ஆவலாக உள்ளேன், இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள். இருநாட்டு மக்களுக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை பாதுகாக்க இணைந்து செயல்படுவோம்,வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்திய – அமெரிக்க மக்களின் ஒளிமயமான, செழிப்பான வளர்ச்சியை பாதுகாக்க நாம் இணைந்து பணியாற்றுவோம். இரு நாட்டு மக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு பேச்சுவார்த்தைகள் வழிவகுக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Truth Social தளத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக தடைகளை நீக்குவதற்காக பேச்சுவார்த்தைகளை தொடர்கின்றன என்று குறிப்பிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்தது.
unknown nodeமுன்னதாக, அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்திருந்தது, இது இந்திய ஏற்றுமதியாளர்களை பாதித்தது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, செப்டம்பர் அல்லது அக்டோபருக்குள் ஒரு இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
