பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார்.தேசத்தின் வளர்ச்சியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்து சென்றுள்ளார் பிரணாப் முகர்ஜி என்று தெரிவித்துள்ளார்.
unknown node