200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பணம் புழக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருந்தது. இதற்கான விளக்கத்தையும் தெரிவித்தது. அதாவது, கள்ளநோட்டு பிரச்சனையில் தீர்வு காண்பதற்காக இந்த கரன்சிகளை அறிமுகம் செய்துள்ளோம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தும், புதிய கரன்சியிலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2019-20 ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கரன்சியில் சுமார் 30,054 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது கடந்த 2018-19 ஆம் ஆண்டை விட சுமார் 37% அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், 200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளில் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் மட்டுமே ரிசர்வ் வங்கி கள்ளநோட்டுகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை கைப்பற்றிய கள்ள நோட்டுகளில் தகவல்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node