"நான் நலமுடன் இருக்கிறேன்" வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாட்டா.!

நான் நலமுடன் இருக்கிறேன். என் உடல்நலம் பற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை என டாட்டா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார்.

Ratan Tata explain his health condition

மும்பை :டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளில் உண்மையில்லை என்று தற்போது தனது சமூக அலுவலகத்தில் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார். தனது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிடுகையில், ” எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். மேலும், இந்த செய்திகள் ஆதாரமற்றவை என்பதை அனைவரிடமும் கூற விரும்புகிறேன். எனது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நல்ல மனநிலையில் உறுதியுடன் உள்ளேன். என்னைப் பற்றி அனைவரும் நினைத்ததற்கு நன்றி. நான் எனது வழக்கமான உடல்நல பரிசோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்று வருகிறேன்.” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் ரத்தன் டாட்டா.

unknown node