மும்பை : டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளில் உண்மையில்லை என்று தற்போது தனது சமூக அலுவலகத்தில் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார். தனது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிடுகையில், […]
முகமது சமி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார் என்பது நமக்கு தெரியும். அதே நேரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்ததும் நமக்கு தெரியும். விவகாரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் […]
Sai Pallavi : சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அப்படி தான் நடிகை சாய்பல்லவி குறித்து வதந்தியான ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், கார்கி திரைப்படம் வெளியான சமயத்தில் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப்ரோமோஷனுக்காக கடந்த 2022, ஜூலை 13ம் தேதி கலந்துகொண்டார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! அப்போது […]
போலி செய்திகள் நாட்டில் புயலை கிளப்பிவிடும். அதன் உண்மை தன்மையை ஆராய்வது கட்டாயம். – பிரதமர் மோடி பேச்சு ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் தொடங்கி, நேற்று இரண்டாவது நாளில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக டெல்லியில் இருந்துகொண்டு கலந்துகொண்டார். அதில் பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார். அதில் பேசுகையில், ‘ ஒரு சிறிய போலீ செய்தி நாட்டில் புயலை ஏற்படுத்திவிடும். என குறிப்பிட்டார். மேலும், ஒரு செய்தியை பிறருக்கு […]
89 கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 89 தரமற்ற கல்லூரிகள் இயங்குவதாகவும், அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து […]
காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து, 1,200 கி.மீ. பயணம் மேற்கொண்ட ஜோதி எனும் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும் செய்தி வதந்தி. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடைப்பயணமாகவும், சைக்கிள் மூலமாகவும் சென்று வந்தனர். இதன்காரணமாக, தனது காயமடைந்த தந்தையை 15 வயதான ஜோதி குமாரி […]
நிபா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள். இன்று அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல உண்மை செய்திகளை அறிந்து கொண்டாலும், பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வதந்தியான செய்தி பரவி வருகிறது. அதன்படி, உலக சுகாதார நிறுவனம் (WHO) இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் வெடிப்பதாக […]
அமீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் நண்பர்களே, நான் கோதுமை பாக்கெட்டில் பணத்தை வைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு புகைப்பிடிக்கும் வழக்கம் மற்றும் உடல்பருமனால் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வடகொரியாவின் தந்தை மற்றும் கிம் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்கு ( அ ) டார்ச் லைட் ஏரியசெய்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒற்றுமையாக செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார். அதன்படி, இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது வீட்டில் அகல்விளக்கு ஏற்றி ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகன், ‘ தேச நலனுக்காக தமிழக மக்கள் தங்களிடம் […]
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன், இந்து கோயில்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும் என்று தெரிவித்தார். ஆனால், ஸ்டாலினுக்கு புராதனச் சின்னங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. பல மாநில அரசுகள் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவில்லை என்ற காரணத்தால் மத்திய அரசு அதை பாதுகாக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழகத்தில் பழமை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் உள்ளதாக மத்திய அமைச்சா் […]
இன்ஸ்டாகிராம் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி உள்ளது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் என குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி செய்யப்படுகிறது. தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராம். இந்த செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் சினிமா துறையில் உள்ள சில முக்கிய பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவது, தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில அரசியல் தலைவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில […]
சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ […]
ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு ??!!! சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன. ஃபேஸ்புக் தற்போது பொய்யான செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. பொய்யாய் பதிவுகளை வெளியிடும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, அவதூறு, வதந்திகளை […]
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் பேசும்போது தேசிய கீதத்தை தமிழில் நாட்டுப்பண் என்று அவர் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. https://twitter.com/News18TamilNadu/status/957489169344864256 திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் நாட்டுப்பண் என்று உச்சரித்ததை தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது… […]