பயணிகளுக்கு இன்ப செய்தி.! அதிரடி தள்ளுபடி போட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.!

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, உள்நாட்டு விமானப் பயணங்களை ரூ.987 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் சர்வதேச விமானப் பயணங்கள் ரூ.3,699 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவும் மார்ச் 12ம் தேதி (நேற்று) முதல் 15ம் தேதி வரையில் இந்த தள்ளுபடி நிலுவையில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் பிப்ரவரி 28, 2021 வரை பொருந்தும் என்று அறிவித்துள்ளது.
இதையடுத்து குழுவாக முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் தெரிவித்தது. டிக்கெட் தள்ளுபடி உடன் ஒரு வேளை உணவும் இலவசமாக வழங்கப்படும். மேலும் கூடுதலாக ஸ்பைஸ்ஜெட் வழங்கும் இதர உணவு, சொகுசு இடவசதி, முன்னரே உள்நுழையும் வாய்ப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணமும் 50 சதவிகிதம் தள்ளுபடியில் வழங்கப்படும். ஸ்டாண்டர்டு சார்டர்ட் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்வோருக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025