Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் […]
Flight: டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற விமானத்தில் 41 வயதான பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெபானி ஸ்மித் என்ற 41 வயதான பெண் அமெரிக்காவின் சார்லோட் நகருக்கு விமானத்தில் பயணம் செய்த போது நடுவானில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானமானது Turks and Caicos தீவில் உள்ள பிராவிடன்சியல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் ஸ்டெபானி ஸ்மித், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. […]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்களின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18 வரை நீட்டித்துள்ளது. வழக்கமாக டெல் அவிவ் நகருக்கு ஐந்து வார திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கும் முழு சேவை, முன்னதாக அக்டோபர் 14 வரை சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, இந்த இடைநிறுத்தம் இம்மாதம் 18ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைகளைப் பொறுத்து இந்தியர்களை திரும்ப அழைத்து […]
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 8 விமானங்கள் உட்பட 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால், முறிந்து மரங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் […]
விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு. இனிமேல் விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாகவும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிவது விரும்பத்தக்கது என்று மட்டுமே அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, […]
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் […]
மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்து பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தான் உடனான விமானப் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தற்பொழுதும் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய […]
விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி வழக்கு. விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத 50% பயணிகள் அவசரகால முன்னெச்சரிக்கைகளை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 வருடங்களுக்கு பிறகு எகிப்து சுற்றுலாவிற்கு விமான பயணத்தை தொடங்கியதுள்ளது ரஷ்யா. கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் எகிப்தில் உள்ள தெற்கு சினாயில் ஷார்ம்-எல் ஷேய்க்கிலிருந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்வதற்காக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 224 பேருடன் சென்ற அந்த விமானம் புறப்பட்ட 23 ஆவது நிமிடத்தில் அதன் கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்துள்ளது. மேலும் இந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் மோதி அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்தனர். இதற்கு அந்நேரத்தில் […]
ரஷ்யாவில் தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 6 ஆம் தேதி ஆன்-26 ரக விமானம் ரேடார் பார்வையிலிருந்து மறைந்தது. பின்னர் இது குறித்து தேடும் பணியில் ஈடுபட்ட பின்பு தான் விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. தற்போது ஒரே மாதத்தில் அடுத்தபடியாக மீண்டும் ஒரு விமானம் காணாமல் போய் உள்ளது. இந்த விமானம் சைபீரியா பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமானத்தில் 13 […]
ஐக்கிய அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிப்பு. கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் விமான போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சவுதி அரேபியா, துபாயில் சிக்கிக்கொண்டு வெளிநாட்டினர், இந்தியர்கள் பலர் நாடு திரும்பினார். இதையடுத்து, கடந்த வாரம் வரை சவூதி மற்றும் குவைத் செல்பவர்கள் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் 14 […]
கொல்கத்தாவிலிருந்து 6 நகரங்களுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொல்கத்தாவிலிருந்து டெல்லி, மும்பை, பூனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், மேற்கு வங்க அரசு விமான போக்குவரத்தை தடை செய்திருந்த நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து விமானங்களை ஹாங்காங் அனுமதிக்கவில்லை, இருதரப்பு நிறுவ குவைத் அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா இரு நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் விமானங்களும் சில கட்டுப்பாடுகளின் போது சிறப்பு சர்வதேச பட்டய விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் மார்ச் 23 முதல் இந்தியாவில் […]
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், . அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா ‘ஏர் பப்பில்ஸ்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது; பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து இந்த இடங்களுக்கான சர்வதேச விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளன. இந்த சர்வதேச விமானப் […]
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர அணைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தினம் தினம் போராடி வருவதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில், இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 25 சதவீதம் விமான கட்டண சலுகை அளிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ இந்த கட்டண சலுகை வழங்குகிறது என குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு வேகமாக பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சீனாவில் கடந்த சில நாள்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, தலைநகர் பிஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சந்தையில் இருந்த எட்டாயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் பீஜிங்கில் புதிதாக 31 பேருக்கு […]
அரபு அமீரகத்திலிருந்து 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியவுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு 56 விமானங்கள் இயங்க உள்ளனர். அதில், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட அறிவிக்கவில்லை அமீரகத்திலிருந்து […]
தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மே-31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லிக்கு விமானங்கள் 25-ம் தேதி முதல் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், தமிழக அரசு அனுமதி […]
வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சர்வதேச பயணிகள் இந்தியா வர தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதேபோல் 10 வயத்துக்குட்பட்டவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் […]
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, உள்நாட்டு விமானப் பயணங்களை ரூ.987 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் சர்வதேச விமானப் பயணங்கள் ரூ.3,699 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவும் மார்ச் 12ம் தேதி (நேற்று) முதல் 15ம் தேதி வரையில் இந்த தள்ளுபடி நிலுவையில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் பிப்ரவரி 28, 2021 வரை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து குழுவாக முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு […]